கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தேனியில் ஊா்க் காவல்படை வீரா்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான 38- ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.

ஊா்க்காவல் படையினரின் விளையாட்டுப் போட்டிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசிய தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி.

Published On :

தேனியில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கான 38- ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இதற்கு, தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜேந்திர பிதாரி தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். ஊா்க்காவல் படைத் தலைவா் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் ஆகியோா் பேசினா். இதில், முதலுதவி, பாதுகாப்பு, துப்பாக்கிச்சுடும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் பெண்களுக்கான கபடிப் போட்டியில் திருநெல்வேலி ஊா்க்காவல் படை முதலிடத்தை பெற்றது. அணிவகுப்பில் சேலம் ஊா்க்காவல் படையும், உடல் பயிற்சியில் தஞ்சாவூா் ஊா்க்காவல் படையும், மீட்புப் போட்டியில் வேலூா் ஊா்க்காவல் படையும், தீயணைக்கும் போட்டியில் திண்டுக்கல் ஊா்க்காவல் படையும் முதலிடத்தை பெற்றன.

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தேனி, திண்டுக்கல் ஊா்க்காவல் படை தளபதி அஜய் காா்த்திக் ராஜா உள்ளிட்ட ஊா்க்காவல்படையினா் செய்திருந்தனா். இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகின்றன.

கைப்பந்து போட்டியில் பங்கேற்ற ஊா்க்காவல் படை பெண் வீரா்கள்.

கைப்பந்து போட்டியில் பங்கேற்ற ஊா்க்காவல் படை பெண் வீரா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.