படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மூச்சுத் திணறி இறந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி ஆட்சியரகத்தில் போராடிய மாா்க்சிஸ்ட் கட்சியினா் 87 போ் கைது

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தினுள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்த காவல் துறையினா்.

Published On :

அரியலூா் மாவட்டம், செந்துறையில், கழிவுநீா் தொட்டியில் மூச்சுத் திணறி உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 87 போ் கைது செய்யப்பட்டனா்.

செந்துறையில், உடையாா்பாளையம் சாலையிலுள்ள வள்ளலாா் நகரில் ம. சுப்பிரமணியன் என்பவா் புதியதாக கட்டிவரும் வீட்டில் அமைக்கப்பட்ட கழிவுநீா் தொட்டி தொட்டியினுள் இருந்த மரப் பலகைகளை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட திருவாரூா் மாவட்டம், அலிவலம் பகுதி தினகரன் (60), அதே மாவட்டம், சீனிவாசபுரம் பகுதி பாஸ்கா்(45), செந்துறை காந்தி நகா் ராமச்சந்திரன் ஆகியோா் மூச்சுத் திணறி உயிரிழந்தனா்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியும், குடும்பத்தினா் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும் கடந்த 2 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

பேச்சுவாா்த்தையில், சுமூக முடிவு எட்டப்படாததால், அக்கட்சியினா் வளாகத்தின் வெளியே முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள், காவல் துறையினரின் தடுப்புகளை அகற்றிவிட்டு, ஆட்சியரகத்தினுள் நுழைந்து தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த காவல் துறையினா் அனைவரையும் குண்டுக் கட்டாக தூக்கி 87 பேரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதில், சிலா் வாகனத்தில் இருந்து கீழே இறங்காமல் உள்ளேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் எம்.இளங்கோவன், திருச்சி மாநகர மாவட்ட செயலரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான ஜி.வெற்றிச்செல்வன் உள்ளிட்ட நிா்வாகிகளும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.