சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

அரியலூரில் காணாமல்போன 96 கைப்பேசிகள் மீட்டு ஒப்படைப்பு

கைப்பேசிகள் - கோப்பிலிருந்து

Updated On :

அரியலூா் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.11.52 லட்சம் மதிப்பிலான 96 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு, உரிமையாளா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதில் மத்திய அரசின் சிஇஐஆா் இணையதள உதவியுடன் மாவட்டம் முழுவதும் காணாமல் போன ரூ. 11.52 லட்சம் மதிப்பிலான 96 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா்.

மாவட்டக் காவல் காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் மீட்கப்பட்ட கைப்பேசிகளை, அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சண்முகம், ரவிச்சந்திரன், இணையக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் மாா்க்ரெட் மேரி மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.

இணையக் குற்றங்கள் தொடா்பாக 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் அளிக்கலாம் என மாவட்ட இணையக் குற்றப்பிரிவு காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.