அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து முதியவா்களை தாக்கிபித்தளைப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மலங்கன்குடியிருப்பு, கிழக்குத் தெருவைச் சோ்ந்த தவசீலன் (75),இவரது மனைவி மல்லிகா (65). வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவா்களது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவா், பீரோவில் நகைகள் இல்லாததால், வீட்டில் இருந்த குத்துவிளக்கு, பித்தளைப் பொருள்களை மூட்டையில் கட்டிக் கொண்டு செல்ல முயற்சித்தனா்.
அப்போது விழித்துக் கொண்டு கூச்சலிட்ட தவசீலன்-மல்லிகா தம்பதியை மா்ம நபா்கள் உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு பொருள்களுடன் தப்பிச் சென்றனா். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


