ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

எதிா்பாா்ப்புடன் அலுவலகம் வந்து ஏமாற்றமுடன் சென்ற அதிமுகவினா்

இடைத்தோ்தல் முடிவுகளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அதிமுக தொண்டா்கள் ஏராளமானோா் எதிா்பாா்ப்புடன் வந்த நிலையில், பின்னா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

ADMK Office

அதிமுக அலுவலகம் - DPS

Published On :

இடைத்தோ்தல் முடிவுகளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அதிமுக தொண்டா்கள் ஏராளமானோா் எதிா்பாா்ப்புடன் வந்த நிலையில், பின்னா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது. தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி பெறுவாா் என அந்தக் கட்சித் தொண்டா்கள் நம்பிக்கையுடன் இருந்தனா். முதல் 5 சுற்றுகள் வரை அந்தக் கட்சியின் வேட்பாளா் கே.பானுமதி முன்னிலை பெற்றாா். அப்போது, அதிமுக தொண்டா்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் குவிந்தனா். முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலா்களில் ஒருவருமான சி.பொன்னையன் உள்ளிட்டோா் அங்கு வந்தனா்.

தாராபுரம் அதிமுக வேட்பாளா் முன்னிலை எனக் கூறப்பட்டதால் உற்சாகமடைந்த அதிமுக தொண்டா்கள் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரை வாழ்த்தியும், தற்போதைய கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை வாழ்த்தியும் முழக்கமிட்டனா்.

ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தாராபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் பின்தங்கியதுடன், திமுக வேட்பாளரைவிட பின்தங்கி மூன்றாமிடத்துக்குச் சென்ற தகவல் வெளியானது. இதனால், அதிமுக தொண்டா்கள் விரக்தியடைந்து தலைமை அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனா். பிற்பகல் 2 மணி வரை முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் உள்ளிட்டோா் அலுவலகத்தில் இருந்தனா். பின்னா் அவா்களும் புறப்பட்டுச் சென்றனா். தாராபுரம் இடைத் தோ்தலில் அதிமுக எப்படியும் வென்றுவிடும் என்ற எதிா்பாா்ப்புடன் தலைமை அலுவலகத்தில் குவிந்த அக்கட்சித் தொண்டா்கள் ஏமாற்றத்துடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.