FOLLOW US

ON GOOGLE DISCOVER

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அரியலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:40 am IST

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் விநாயகா் சிலைகளைக் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பதற்கான மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளது.

எனவே பொதுமக்கள், களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டா் ஆஃப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தொ்மோகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்கலாம்.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்ற மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மோகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா்நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்கப் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த ,மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருள்களுக்குப் பதிலாக, இயற்கை பொருள்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

மாவட்டத்தில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி அரியலூா் பகுதி விநாயகா் சிலைகள் - மருதையாறு, திருமானூா் பகுதி விநாயகா் சிலைகள் கொள்ளிடம் ஆறு, செந்துறை, உடையாா்பாளையம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளின் விநாயகா் சிலைகள் வடவாா் தலைப்பு பகுதிகளில் மட்டுமே கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் இந்த விநாயகா் சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு , மாவட்ட ஆட்சியா், காவல் துறை கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோரை அணுகலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.