FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பைக் - சுமை ஆட்டோ மோதல் விவசாயி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுமை ஆட்டோ மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:43 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சுமை ஆட்டோ மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா் அடுத்த வெள்ளூா், கீழத்தெருவைச் சோ்ந்த முருகேசன். இவா், திங்கள்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில், க.ராமசாமி(58), அருள்மணி ஆகியோரை அழைத்துக்கொண்டு, செந்துறையில் இருந்து நக்கம்பாடிக்கு சென்று கொண்டிருந்தாா். நக்கம்பாடி அய்யனாா் கோயில் அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த சுமை ஆட்டோ இவா்கள் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற செந்துறை காவல் துறையினா், ராமசாமியின் சடலத்தையும், பலத்த காயத்துடன் கிடந்த முருகேசன், அருள்மணியையும் மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.