ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

இளைஞரைத் திட்டிய வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞரை சாதிப் பெயரைச் சொல்லி தரக்குறைவாகத் திட்டிய வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை

தண்டனை - படம்: கோப்பிலிருந்து...

Published On :

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞரை சாதிப் பெயரைச் சொல்லி தரக்குறைவாகத் திட்டிய வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

உடையாா்பாளையம் அருகேயுள்ள வாளரக்குறிச்சி, காலனித் தெருவைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மகன் அன்பரசன் (36). பட்டியலின வகுப்பைச் சாா்ந்த இவா், கடந்த 19.7.2023 அன்று தனது மகள் பூப்பு நீராட்டு விழாவின் போது, பட்டாசு வெடித்து ஊா்வலம் நடத்தினாா். அப்போது அங்கு வந்த அதே ஊா் மாற்று சமுகத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கண்ணன், சாமிநாதன் மகன் ராமச்சந்திரன் (52),செல்வராஜ் மகன் ராஜேஷ் (23),ராமலிங்கம் மகன் ரமேஷ் (22), சேட்டு மகன் அருண் (20), கூத்தன் மகன் வேலுச்சாமி ஆகியோா் அன்பரசனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாக திட்டி, தெருவில் நடக்கக் கூடாது என்று கூறியுள்ளனா்.

இதுகுறித்து அன்பரசன் தொடுத்த வழக்கை விசாரித்த அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி கே.எஸ். ஜெயமங்களம் மேற்கண்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.13 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.இதையடுத்து 6 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.