
சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமித்து சோளம் நடவு செய்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை அருகேயுள்ள வைகநல்லூர் கழுகூரைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பது: எங்களது கிராமத்தில் கடந்த 12-ம் தேதி வெள்ளையன் என்பவர் இறந்துவிட்டார். அவரது சடலத்தைப் புதைக்க சுடுகாட்டில் குழிதோண்டியபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் எப்படி எனது நிலத்தில் சடலத்தைப் புதைக்கலாம் எனத் திட்டினார். அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் மாரியப்பன், செல்வம், சுப்ரமணியன், உத்திரம் உள்ளிட்டோரும் தகாத வார்த்தையால் பேசினர்.
மேலும் சுடுகாட்டுக்கு இந்த வழியில் வரக்கூடாது, மீறி வந்தால் வெட்டுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். எனவே இனி இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது சுப்ரமணி ஆக்கிரமித்த நிலத்தில் சோளப்பயிர் விதைத்துள்ளார்.
எனவே சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, சுடுகாட்டுக்குச் சுற்றுச்சுவர், எரிமேடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





