மாநில அளவிலான தடகளப் போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
பள்ளி கல்வித்துறை சார்பில் 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என். நவநீதி, கேகே.மோனீஸ்வரன், பி.விக்னேஷ், என்.ஜீவன்ராஜ் ஆகியோர் 4ல400மீ.தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகளையும் பள்ளியின் தலைவர் பிஎம்.கருப்பண்ணன், தாளாளர் பிஎம்கே.பாண்டியன், நிர்வாகி பிஎம்கே.பெரியசாமி, ஆலோசகர் பி.செல்வதுரை, பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.