வி.சி. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெ.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார், செய்தித்தொடர்பாளர் இளங்கோவன், கரூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெறியாளர் நாவரசு, மாநிலதுணைச் செயலாளர் பகலவன், மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கரூர் நகரச் செயலாளர் முரளி, தாந்தோணி நகரச் செயலாளர் சக்திவேல், இனாம்கரூர் நகரச் செயலாளர் அருள், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜா, துணை அமைப்பாளர் சந்திரசேகர், மாணவரணி அமைப்பாளர் தீபக்குமார் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டில் டெங்கு சிகிச்சை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...