மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  ஏப். 9 -இல் சமரசத் தீர்வு  

கரூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் வழக்குகளில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்  வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:19 am IST

கரூரில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் வழக்குகளில் தீர்வு காண்பது குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்  வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தனி நபர்கள் அல்லது அமைப்புகள் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு, வழக்குகளுக்கு மத்தியஸ்தம்  மற்றும் சமரசப் பேச்சு மூலம் எளிய வழியில்  இரு தரப்பினரின் கருத்தொற்றுமையுடன்  தீர்வு காண்பதை வலியுறுத்தி, மத்தியஸ்தம் தொடர்பாக பொதுமக்களிடையே  பெருமளவில்  விழிப்புணர்வை உருவாக்கும்  வகையில் விழிப்புணர்வுக் கூட்டம்  நடத்தப் பட உள்ளது.    இந்த விழிப்புணர்வு  கூட்டம் வரும் 9 ஆம் தேதி கரூர் மாவட்ட   ஒருங்கிணைந்த  நீதிமன்ற கட்டட  வளாகத்தில்  நடைபெறும். 
கூட்டத்தில்  உயர்மட்ட  நீதித்துறை  அலுவலர்களுடன்,  மாவட்ட ஆட்சியர்,  கரூர் மாவட்ட  கண்காணிப்பாளர்  மற்றும்  இதர மாவட்ட  அலுவலர்கள் பங்கேற்பார்கள். பொதுமக்கள் இக்கூட்டத்தில்  பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம்  மற்றும்  சமரச  நடவடிக்கைகள்  மூலம்  தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.