சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புதன்கிழமை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:21 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புதன்கிழமை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி கரூரில் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மாரப்பன் தலைமையில் புதன்கிழமை நீதிமன்ற பணியைப் புறக்கணிப்பு செய்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 
தொடர்ந்து சங்கத் தலைவர் மாரப்பன் கூறியது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. கர்நாடகத் தேர்தலை மனதில் கொண்டு, இத்தகைய செயலில் பாஜக  மத்திய அரசு செயல்படுகிறது.  
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  வரும் சனிக்கிழமை வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.