பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

முத்தனூரில்  டிரான்ஸ்பார்மர் பழுது:  மின்தடையால் அவதி

நொய்யல் அருகே முத்தனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் ஏற்பட்ட மின்தடையால் திங்கள்கிழமை இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:34 am IST

நொய்யல் அருகே முத்தனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் ஏற்பட்ட மின்தடையால் திங்கள்கிழமை இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு அருகேயுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் நடைபெறுகிறது.  
இந்த டிரான்ஸ்பார்மர் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பழுதானதால் மின்தடை ஏற்பட்டு, அப்பகுதி இருளில் மூழ்கியது. இதுதொடர்பாக உடனே அப்பகுதியினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
ஆனால் யாரும் வராததால் இரவு முழுவதும்அப்பகுதி இருளில் மூழ்கியது. 
மேலும் தற்போது பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுக்கு படிக்க இயலாமல் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.