பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

வேன்மீது பேருந்து மோதல்: வேன் ஓட்டுநர் சாவு

அரவக்குறிச்சி அருகே பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:34 am IST

அரவக்குறிச்சி அருகே பஞ்சராகி நின்றுகொண்டிருந்த வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாரமங்கலம் பவளத்தனூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(35), வேன் ஓட்டுநர். இவர் தனது வேனில் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் நிமிலன் (26), யோகராஜ் மகன் ஜெகன் (25), லட்சுமணன் மகன் ராஜ்குமார் (25) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை திண்டுக்கல்லுக்குச் சென்று காய்கறி வாங்கிவிட்டு மீண்டும் சேலம் நோக்கி வந்தனர்.  
மதுரை-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே வந்தபோது திடீரென வேன் டயர் பஞ்சரானது. இதனால் ஓட்டுநர் சுரேஷ்குமார் உள்பட 4 பேரும் வேன் முன் நின்றுள்ளனர். அப்போது பின்னால் வேடசந்தூரில் இருந்து கரூரை நோக்கி வந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில் வேன் முன் நின்றிருந்த சுரேஷ்குமார் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.
 உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே சுரேஷ்குமார் இறந்தார். 
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து அரசு பேருந்து ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த முருனேளி பகுதியைச் சேர்ந்த அரங்கநாதனை (46) கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.