ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

புன்னம் பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

புன்னம் பெரிய மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:36 am IST

புன்னம் பெரிய மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட புன்னம் பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி ஒரு கால பூஜையும் முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. 
இக்கோயில் சித்திரை தேரோட்ட விழா கடந்த 2-ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையடுத்து வீடு வீடாகச் சென்று படி விளையாட்டு பூஜை நடைபெற்று வந்தது. இதன்படி அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்வர்.  தொடர்ந்து கடந்த 15-ம் தேதி பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு எல்லா பானையிலும் பொங்கல் எடுத்து ஒன்று சேர்த்து படையலிட்டு வடிசோறு பூஜை,  மாவிளக்கு வழிபாடு நடந்தது. திங்கள்கிழமை காலை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வந்தும்,  அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.   தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை  பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர்  பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்,  கிடாவெட்டுதல்,  மாவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோயிலைச்சுற்றி முக்கிய வீதிகளில் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது.   இதில் புன்னம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை கம்பம் கோயில் கிணற்றில் விடப்பட்டு மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.  விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நடேசன், முப்பாட்டுக்காரர் பிச்சைமுத்து மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.