முதல்வரைக் கண்டித்து வரும் 9-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் அச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எம். சுப்ரமணியம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச்
செயலாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓவர்சியர்களுக்கு ஊதிய விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களுக்கும் மேலாக ஊரக வளர்ச்சித் துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அமைச்சர், எம்எல்ஏ மற்றும் ஆணையர்கள் உங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறோம் என வாக்குறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்தும், தமிழக ஆசிரியர்கள், அலுவலர்களை ஒருமையில் பேசிய முதல்வரைக் கண்டித்தும் வரும் 9-ம் தேதி அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட துணைத் தலைவர் மனேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொருளாளர் விஜயபாஸ்கர் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.