மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ஜன.1-க்குப் பிறகு பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

ஜனவரி 1-க்கு பிறகு பிளாஸ்டிக் பொருள்களைப்  பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன். 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஜனவரி 1-க்கு பிறகு பிளாஸ்டிக் பொருள்களைப்  பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட  ஆட்சியர் த. அன்பழகன். 
தமிழகம் முழுவதும் வரும் ஜன. 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி பஞ்மாதேவி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பங்கேற்று மேலும் பேசியது:  தமிழகம் முழுவதும் ஜன.1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 
எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் பைகள், உணவை மூடவும், மேசை மீது போடவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள், டம்ளர்கள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தயாரிக்கவோ, இருப்பு வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
1.1.2019க்குப் பிறகு பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். கால்நடைகள், பறவைகள் போன்றவை நம்மால் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை உட்கொள்ளுவதால் உணவுக்குழல் அடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றன. வீட்டில் இருந்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகின்றது. சாதரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு 100 முதல் 1000 ஆண்டுகள் ஆகின்றது. 
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், டம்ளர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 
சுயஉதவிக் குழுவினர் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் நல்லமுறையில் விற்பனை செய்யலாம். 
நாம் ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால் நமது சமுதாயமே பிளாஸ்டிக் இல்லாத சமூகமாக உருவெடுக்கும். அரசின் திட்டம் வெற்றிபெற  பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. எனவே, கரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட வேண்டும் என்றார். 
கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், செல்வி, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.