/

உப்பிடமங்கலம் அருகே சாலை விபத்தில் இருவர் சாவு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே  திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்

Updated On :25 டிசம்பர் 2018, 9:53 am IST

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே  திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், சித்தலவாய் அருகிலுள்ள முனையனூரைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி ஜெயபால் பொம்மன் (33). இவரது மனைவி திலகவதி (29). மகன் கிரி  (3). கரூரில் தையல் கடை அமைப்பது தொடர்பாக திங்கள்கிழமை மாலை  உறவினரைச் சந்தித்துவிட்டு, மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் ஜெயபால் பொம்மன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
உப்பிடமங்கலம் அருகே லிங்கத்தூர் பிரிவில் சென்ற போது, எதிரே அம்மாபட்டியைச் சேர்ந்த பிரபாகர் (23)  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ஜெயபால் பொம்மன்  ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில்,  ஜெயபால் மோகனும், பிரபாகருடன் மோட்டார் சைக்கிளில் வந்த  இளைஞரும்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
ஜெயபால் பொம்மன் மனைவி திலகவதி, பிரபாகர் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தில் 3 வயது குழந்தை கிரி காயமின்றி உயிர் தப்பினான்.
விபத்து குறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீஸார்  இருவரது சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் காயமடைந்து மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயைப் பார்த்து 3 வயது குழந்தை கிரி அழுதது அங்கு உள்ளோரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.