முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மாநில கபடி: கரூர் அணிக்கு கோப்பை

கரூரில் நடைபெற்ற மாநில கபடி போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த கரூர் அணிகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On :25 டிசம்பர் 2018, 9:28 am IST

கரூரில் நடைபெற்ற மாநில கபடி போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்த கரூர் அணிகளுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
 கரூர் பி12 நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
திருச்சி, கரூர்,  தேனி, மதுரை, ஈரோடு, கோவை, தஞ்சை உள்ளிட்ட 15  மாவட்டங்களைச் சேர்ந்த 66 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட போட்டியின் இறுதியாட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில்  வரகூர் அணியை 22-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்று கோப்பையை  கரூர் பி12 அணி வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதலிடம் பெற்ற பி12 அணிக்கு ரூ.15,000 பரிசுத் தொகை மற்றும் கோப்பையை காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். ஸ்டீபன்பாபு வழங்கினார். 2,3 ஆம் இடங்களைப்பெற்ற வரகூர், வேலூர் மாவட்ட அணிகளுக்கு லோகேசுவரன், மனோஜ் ஆகியோர் பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.