வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மதிமுக சார்பில் பேச்சுப்போட்டி

கரூரில் மதிமுக சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:37 am IST

கரூரில் மதிமுக சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூர் மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த போட்டிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கபினி கேகே.சிதம்பரம் தலைமை வகித்தார். மாணவர் அணி துணை அமைப்பாளர் பி.ஆர். பாஸ்கரன் வரவேற்றார்.  
இதில் மாநில இளைஞரணி துணைச்செயலர் ஆசை சிவா, மாவட்ட துணைச் செயலர் வி.பி. கேசவன், நகரச் செயலர் கேஆர். சண்முகம்,  முன்னாள் வேலாயுதம்பாளையம் சேர்மன் நாச்சிமுத்து,  மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஆர். மனோகரன், எஸ். பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பெரியார்-அண்ணா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக ஓய்வுபெற்ற ஆசிரியர் இரா. காமராசு, மாநில மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் பால. சசிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர். 
போட்டியில் முதல் பரிசை கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் மகேஸ்வரன் பெற்றார். இவருக்கு ரூ. 6,000 பரிசு மற்றும் கேடயமும், இரண்டாமிடம் பிடித்த அன்னை கல்லூரி மாணவி அனுசுயாவுக்கு ரூ.4,000 பரிசு மற்றும் கேடயமும், மூன்றாமிடம் பிடித்த அரசு கலைக்கல்லூரி மாணவர் பாலமுருகனுக்கு ரூ.2,000 பரிசு மற்றும் கேடயம் ஆகியவற்றை மாவட்டச் செயலர் கபினி கே.கே. சிதம்பரம் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.