மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினர்களாக அழைப்பு

குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:47 am IST

குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக 2015-ம் ஆண்டின் இளைஞர் நீதிக்குழுமம், சட்டம் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு குழந்தைகள் நலக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அவ்வாறு அமைக்கப்படும் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் நபர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இக்குழுவில் உறுப்பினர் மற்றும் தலைவராக விரும்பும் தகுதி வாய்ந்த சமூகப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பிக்கும் நபர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். அல்லது குழந்தை உளவியல் அல்லது உளவியல் சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு நபர் ஒரு குழுவில் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர். தொடர்ந்து பதவி வகிக்க இயலாது.
விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.13 சாமி வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் எதிரில், கரூர்  - 639007 என்ற முகவரியில் விண்ணப்பத்தை நேரில் வழங்கலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். பணி நியமனம் அரசின் முடிவே இறுதியானது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.