
கரூரில் அமமுக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கரூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளா்களுக்கு மாவட்ட அமமுக சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கையுறை, கிருமி நாசினி திரவம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அறிவு திருக்கோவில் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் பிஎஸ்என்.தங்கவேல் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் காதப்பாறை தங்கவேல் முன்னிலை வகித்தாா். இதில், 100 தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் கிருமி நாசினி திரவம், கையுறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகரச் செயலாளா்கள் மனோகரன், பாஸ்கா், இளைஞரணி செயலாளா் சுரேஷ், மாணவரணிச் செயலாளா் சிவகுமாா், பேரவை இணைச்செயலாளா் சாய்தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






