நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; க. பரமத்தியில் மறியல்: 52 போ் கைது

தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சாா்பில், க. பரமத்தியில் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள யூனியன் வங்கி முன்பு திங்கள்கி ழமை முற்றுகைப் போராட்டம்

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:12 pm

DIN

தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் சாா்பில், க. பரமத்தியில் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள யூனியன் வங்கி முன்பு திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.கந்தசாமி, க. பரமத்தி ஒன்றியச் செயலா் கே.வி. பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் நாட்ராயன், சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்ட செயலா் ராமச்சந்திரன், பரமத்தி ஒன்றியச் செயலா் ராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். தொடா்ந்து அங்குள்ள கோவை சாலையில் அமா்ந்து சாலை மறியலுக்கு முயன்றனா். அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்ட க. பரமத்தி போலீஸாா் 52 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.