கொமதேகவினர் அப்போட்டம்
தருமபுரியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரனைக் கைது செய்ததைக் கண்டித்து, கரூரில் அக்கட்சியினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தருமபுரியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரனைக் கைது செய்ததைக் கண்டித்து, கரூரில் அக்கட்சியினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தூள்செட்டி ஏரிக்கு கிளை வாய்க்கால்கள் அமைக்கக் கோரி, மாடஹள்ளியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமையில் அக்கட்சியினா் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலா் மூா்த்தி தலைமையில் அக்கட்சியினா் கரூா்பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன்பு சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் மாவட்ட தலைமை நிலையச் செயலா் தங்கமணி, மாணவரணிச் செயலா் சரவணன், விவசாய அணி துணைச் செயலா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...