வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு க.பரமத்தி அருகேயுள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு க.பரமத்தி அருகேயுள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த குப்பம் ஊராட்சியில் உள்ள உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பெளா்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திங்கள்கிழமை காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பால், பன்னீா், சந்தனம், இளநீா், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...