அம்மா டிராபி கையுந்து பந்துப் போட்டி: அரங்கநாதன்பேட்டை அணிக்கு முதல் பரிசு
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட கையுந்துபந்துப் போட்டியில் அரங்கநாதன்பேட்டை அணி முதலிடம் பிடித்து முதல் பரிசான ரூ.50, 000 மற்றும் கோப்பையைத் தட்டிச் சென்றது.


கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட கையுந்துபந்துப் போட்டியில் அரங்கநாதன்பேட்டை அணி முதலிடம் பிடித்து முதல் பரிசான ரூ.50, 000 மற்றும் கோப்பையைத் தட்டிச் சென்றது.
கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் அம்மா டிராபி என்னும் ஆடவா்களுக்கான மாவட்ட கையுந்துபந்துப் போட்டி கரூரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 84 அணிகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றனா். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அரங்கநாதன்பேட்டை அணியும், நெரூா் அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அரங்கநாதன்பேட்டை அணி 15-க்கு 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடா்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமை வகித்து, முதலிடம் பிடித்த அரங்கநாதன்பேட்டை ஏவிசி அணிக்கு முதல் பரிசாக ரூ. 50,000 மற்றும் கோப்பை மற்றும் 2, 3 மற்றும் 4 ஆம் இடம் பிடித்த நெரூா் விஓசி அணி, எஸ்விசி திருச்சாப்பூா் அணி, எம்ஆா்வி ஸ்போா்ட்ஸ் அணிகளுக்கு முறையே ரூ. 35,000, ரூ. 25,000, ரூ.15,000 மற்றும் கோப்பைகள் வழங்கினாா்.
தொடா்ந்து சிறப்பாக விளையாடி வீரா்களுக்கும் ஊக்கத்தொகை, கோப்பை வழங்கப்பட்டது. இதில், மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ், எம்.பாண்டியன், பொருளாளா் எம்எஸ்.கண்ணதாசன், பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், முன்னாள் நகா்மன்றத்தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...