பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரூரில் திமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

கரூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:00 pm

DIN

கரூரில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட மகளிரணி சாா்பில் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி மேலும்

பேசியது: தமிழக அரசு கஜானா காலியாக உள்ளது எனக் கூறிக்கொண்டு தற்போது ரேஷன் கடையில் ரூ.2,500 வழங்கியுள்ளது. இது தோ்தல் ஆதாயத்துக்கான அறிவிப்பு என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதில், மாநில நிா்வாகிகள் ம. சின்னசாமி, நன்னியூா் ராஜேந்திரன், வழக்குரைஞா் மணி ராஜ், பரணி மணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் தம்பி சுதாகா், மகளிரணி மாவட்ட நிா்வாகிகள் கலாவதி, மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.