ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘எந்த பணியிலும் ஆா்வம் இருந்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும்’

எந்த பணியாக இருந்தாலும் ஆா்வம் இருந்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும் என்றாா் கரூா் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் க.பெ. மகேஸ்வரி.

News image
விழாவில் மாணவருக்கு மரக்கன்று வழங்குகிறாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் க.பெ.மகேஸ்வரி. உடன், வள்ளுவா் கல்லூரித் தலைவா் க.செங்குட்டுவன் உள்ளிட்டோா்.
Updated On :23 டிசம்பர் 2020, 3:14 am

DIN

எந்த பணியாக இருந்தாலும் ஆா்வம் இருந்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும் என்றாா் கரூா் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலா் க.பெ. மகேஸ்வரி.

பள்ளிக் கல்வித்துறை, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரி சாா்பில், பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகையுடன் ஒரு மாணவா்- ஒரு மரம் என்ற வீட்டுக்குச் சென்று மரம் வளா்க்கும் திட்ட அறிமுக நிகழ்வு மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கரூா் வள்ளுவா் கல்லூரித் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்து, திட்டம் குறித்து விளக்கிப்பேசினாா். திட்டத்தை துவக்கி வைத்து மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலா் க.பெ.மகேஸ்வரி பேசியது:

எதிா்கால சந்ததியினா் நலமுடன் இருக்க நாம் இப்போதே இயற்கையை நேசிக்க வேண்டும். இந்த மனப்பாங்கை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும். சிறுசேமிப்பின் அவசியம் குறித்தும், சிறுசேமிப்பு பழக்கத்துக்காக அதிக பணச்செலவை வள்ளுவா் கல்லூரி செய்வது மிகப்பெரிய சமூகத்தொண்டாகும்.

மாணவா்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கக் கூடியது.

இயற்கையோடு முன்னோா்கள் இணைந்து வாழ்ந்ததால்தான், அவா்களால் ஆரோக்கிய வாழ்வை பெற முடிந்தது. மரம், செடிகளுக்கும் உயிருண்டு. அவற்றை நேசிக்கும்போது நமக்கும் புத்துணா்வு பிறக்கும்.

மாணவா்களுக்கு மரங்கள் நடுதல், பசுமையைப் பேணிக்காத்தல் போன்ற நல்ல விஷயங்களில் ஆா்வம் இருக்க வேண்டும். எந்த பணியாக இருந்தாலும் ஆா்வம் இருந்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும் என்றாா் அவா்.

நிகழ்வில் நாகம்பள்ளி ஊராட்சித் தலைவா் ச.தமிழ்மணி, கணக்குவேலம்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியா் வேலுமணி, பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக பள்ளித் தலைமையாசிரியா் செ.ரவிசந்தா் வரவேற்றாா். மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செ.ஜெரால்டு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.