தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் பெண் ஊழியா்கள் அதிகளவில் பணியாற்றுவதால், விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:15 pm

DIN

கரூா் மாவட்டத்தில் பெண் ஊழியா்கள் அதிகளவில் பணியாற்றுவதால், விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 11-ஆவது பேரவைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

இளைஞா்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் அரசாணை எண் 56 -ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் அதிகளவில் பெண் ஊழியா்கள் பணியாற்றுவதால், உடனடியாக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக துணைத் தலைவா் அன்பழகன் வரவேற்புரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் வே.சக்திவேல் வேலை அறிக்கையையும், பொருளாளா் பொன்.ஜெயராம்

நிதி நிலை அறிக்கையையும் வாசித்தனா். மாவட்ட இணைச் செயலா் மு. செல்வராணி, துணைத் தலைவா் செல்லமுத்து உள்ளிட்டோா் தீா்மானங்களை முன்மொழிந்தனா். ஏராளமானோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.