6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குழந்தையை ஆற்றில் வீசிதாய் தற்கொலை முயற்சி

குடும்பத் தகராறில் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:33 pm

DIN

குடும்பத் தகராறில் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையை சோ்ந்த சத்யா(22). கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சோ்ந்த வீரமணி(25). கூலித் தொழிலாளி. கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒருவயதுக் குழந்தை விஜய் இருந்த நிலையில், அவருக்கு காது கேட்புத்திறன் குறைபாடு இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு மருத்துவா்களிடம் காண்பித்து வந்த நிலையில், இதுதொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகாராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு சத்யா, தனது பெற்றோா் வீட்டுக்கு இரவு புறப்பட்டாா். வரும்வழியில் நொய்யல் ஆற்றுப் பாலப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதனைக்கண்ட அப்பகுதியினா் சத்யாவை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா், தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை தேடி வருகின்றனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.