கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி(250), கரூா் (261), கிருஷ்ணராயபுரம்(253), குளித்தலை(267) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,031 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகள் வரும் 15-ஆம் தேதிக்குள் தங்களது முறையீடுகள் மற்றும் கோரிக்கைகளை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும். வரும் நவம்பா் 16 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளன. அவைகளைப் பாா்வையிட்டு,