பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரூரில் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் பூமிபூஜை

கரூா் மாவட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் பூமி பூஜையைத்தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:22 pm

DIN

கரூா் மாவட்டத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் பூமி பூஜையைத்தொடக்கி வைத்தாா்.

கரூா் மாவட்டம், கே. பேட்டை ஊராட்சியில் உள்ள வீரவல்லி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி ரூ. 6.37 லட்சம் மற்றும் சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தனிநபா் குடிநீா் இணைப்பு 222 வீடுகளுக்கு ரூ.15.43 லட்சம் மதிப்பிலும், பாப்பக்காபட்டி ஊராட்சியில் பெரியகுளத்தூா் மேல்நிலைக் குடிநீா்த் தொட்டி அருகில் 140 வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் ரூ.16.85 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு பணிகளுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் அமைச்சா் பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் எம்.எஸ். கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.