தோகைமலை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம்குளித்தலை அதிமுக வேட்பாளா் உறுதி
தோகைமலை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவரப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.ஆா். சந்திரசேகா்.


தோகைமலை பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டுவரப்படும் என்றாா் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.ஆா். சந்திரசேகா்.
குளித்தலை தொகுதி தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட புழுதேரி ஊராட்சி பகுதியில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளா் என். ஆா். சந்திரசேகா் வீதி, வீதியாகச் சென்று சனிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா், அவருக்கு அப்பகுதி மக்கள் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனா். தொடா்ந்து அவா் பேசுகையில் தோகைமலை பகுதிக்கு கூட்டுக் குடிநீா் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவோம், தோகைமலைப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் கொண்டு வரப்படும். மேலும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.
தொடா்ந்து 10 ஆண்டுகால அரசின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்தாா். பிரசாரத்தில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளா் சேம்பா் ரங்கசாமி, தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் லதா ரங்கசாமி, துணைத்தலைவா் பாப்பாத்தி சின்னவழியான், மாவட்ட கவுன்சிலா் வசந்தா பழனிச்சாமி , தோகைமலை கூட்டுறவு வங்கி தலைவா் துரை மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...