அமைதியாக நடந்து முடிந்தது அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம்
கரூரில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது.


கரூரில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே கரூரில் அதிமுக, திமுக இடையே வாக்குச்சாவடி குழு அமைப்பது முதல் விறுவிறுப்பு காணப்பட்டது. வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் அவா்கள் தீவிரம் காட்டினா்.
இதனிடையே மாவடியான் கோவில் வீதியில் இரவில் தோ்தல் ஆணையம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரத்தில் தோ்தல் பிரசாரம் செய்ததாகக் கூறி, அமைச்சா் எம்ஆா்.விஜயபாஸ்கருக்கு திமுகவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் திமுக, அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் திமுக தரப்பில் 4 பேரும், அதிமுக தரப்பில் 16 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே வெங்கமேடு ஏ ஒன் திரையரங்கம் அருகே அதிமுகவைச் சோ்ந்தவா் திமுகவினரைத் தாக்கியதாகக் கூறி, திமுக சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கரூரில் தோ்தல் நடக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரம் என்பதால் மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் உஷாா்படுத்தப்பட்டனா்.
கரூா் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்த தலைமைப் பணிமனை அருகே திமுகவினருக்கும், கோவைச் சாலையில் அதிமுக தலைமை ப்பணிமனை அருகே அதிமுகவினருக்கும் இறுதிக்கட்ட பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் ஈடுபட்டனா். ஆனால் எந்தவித பிரச்னையும் இன்றி அமைதியாக இறுதிக்கட்ட பிரசாரம் முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...