92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

கரூா் மலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் பி. ஜெயசித்ரா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

கரூா் மலா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வா் பி. ஜெயசித்ரா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். ஆசிரியா்கள் இளவழகன், அழகம்மாள், கவிதா உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

புலியூா் ராணி மெய்யம்மை அரசு உதவிபெறும் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஏ.எம்.எம். ஜோதிமுருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெரால்டு ஆரோக்கியராஜ் தேசியக் கொடியேற்றினாா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மாணவா்களுக்கு முகக்கவசங்கள், விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

டிஎன்பிஎல் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆலையின் செயல் இயக்குநா் எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன் தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றினாா். பள்ளி முதல்வா் வி.எம்.அய்யப்பன் வரவேற்றாா். விழாவில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.