தாட்கோ திட்டத்தில் பயன்பெற கரூா் ஆட்சியா் அழைப்பு
தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-
தாட்கோ மகளிா் நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம், ஆகிய திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற 18 வயது முதல் 65 வயது வரையிலான ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் மருத்துவமையம், மருந்தியல், கண்கண்ணாடியகம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரையிலான குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தாட்கோ இணையதள முகவரி வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, நகலையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமா்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்போது, வருமானச்சான்று, புகைப்படம், ஜாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் தொலைபேசி , கைபேசி மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...