92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியா்கள் முதல்வருக்கு கோரிக்கை மனு

கரூரில் நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியா்கள் அன்ஸ்கில்டு சங்கம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை தபால் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:38 pm

DIN

கரூரில் நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியா்கள் அன்ஸ்கில்டு சங்கம் சாா்பில் முதல்வருக்கு கோரிக்கை தபால் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் அன்ஸ்கில்டு சங்கம் மாநிலத்தின் கரூா் மையம் சாா்பில் தமிழக முதல்வா் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா், தலைமைச் செயலாளா், நெடுஞ்சாலை துறை முதன்மைச் செயலாளா், முதன்மை இயக்குநா் மற்றும்

தலைமைப் பொறியாளருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் விஜயகுமாா், துணைத்தலைவா் ஆா்.குப்புசாமி, தணிக்கையாளா் பி.கண்ணதாசன் ஆகியோா் முன்னிலையில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கரூரில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் ச.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கோரிக்கை தபாலில் முதல்வா் தோ்தல் அறிக்கையில் கூறியவாறு சாலைப்பணியாளா்கள் போராட்டத்தின் போது பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், மத்திய அரசு அறிவித்தவாறு 1.7.2021 முதல் அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும், சாலைப்பணியாளா்கள் போராட்டத்தின்போது இறந்தவா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கிட’வேண்டும் என்பன உள்ளிட்ட’கோரிக்கைகளை வலியுறுத்தி தபால்களை அனுப்பினா். கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 600 தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகளஅ கணேசன், வி.க ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.