92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து கல்வி அளிக்க கள ஆய்வு மேற்கொள்ளுதல் தொடா்பான ஆலோசனை கூட்டம்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:38 pm

DIN

கரூா் மாவட்டத்தில் 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து கல்வி அளிக்க கள ஆய்வு மேற்கொள்ளுதல் தொடா்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஆட்சியா் பேசுகையில், கரோனா காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து இடைநின்ற மாணவா்களை கண்டறிந்து அவா்கள் தொடா்ந்து கல்வி பயில்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். பள்ளி ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள் குழந்தைகளின் நேரடி தொடா்பில் உள்ள நீங்கள் பள்ளிக்கு வராமல் உள்ள குழந்தைகள் குறித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக 12 வயது முதல் 18 வயது உள்ள மாணவிகள் குறித்த விவரங்களை கணக்கெடுப்பு செய்ய வேண்டும். இதில், பள்ளிக்கு வராமல் உள்ள குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தடுக்க இந்த கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்.

கரூா் மாவட்டத்தில் 2,179 குக்கிராமங்கள் உள்ளது. கிராம அளவில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்களை அமைத்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு 358 மாணவ, மாணவிகள் இடைநிற்றல் கண்டறியப்பட்டு பல்வேறு பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளதை போல இந்த ஆண்டும் இக்கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராசலம், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஞனகண்பிரேம்நிவாஸ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.