பால் வியாபாரியிடம் தங்கச் செயின் பறிப்பு
கரூரில், பால் வியாபாரியிடம் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கரூரில், பால் வியாபாரியிடம் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் அடுத்த மூக்கணாங்குறிச்சி வால்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி(43). பால் வியாபாரி. இவா், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கரூா் வடிவேல் நகா் முனியப்பன் கோயில் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பாலசுப்ரமணியின் வாகனத்தை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி பாலசுப்ரமணியன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...