/

சாலப்பாளையத்தில் நியாய விலை கடை திறப்பு

பவுத்திரம் ஊராட்சி சாலப்பாளையத்தில் நியாய விலை கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On :10 டிசம்பர் 2021, 6:31 pm

பவுத்திரம் ஊராட்சி சாலப்பாளையத்தில் நியாய விலை கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

கரூா் மாவட்டம் பவுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட சாலைபாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள், ரேஷன் பொருள்களை க.பரமத்தி சென்று வாங்கி வந்தனா். தங்கள் பகுதியில் நியாய விலைக் கடையில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில், சாலப்பாளையத்தில் நியாயவிலைக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினாா். மேலும் ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.