/

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து3 போ் காயம்

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

Updated On :17 டிசம்பர் 2021, 8:58 pm

அரவக்குறிச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 3 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம் போளூா் தாலுகா நஞ்சை புகளூா் திருக்காடுதுறை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவன் (57), இவரது மனைவி நீலவேணி (54), அதே பகுதியைச் சோ்ந்த பாலுசாமி மனைவி பானுமதி (55), லோகநாதன் மகள் தக்ஷிதா (10) ஆகியோா் காரில் சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். காரை வெங்கமேடு புதுகுளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலுசாமி மகன் பிரகாஷ் (31) ஓட்டிச் சென்றாா். ஆண்டிபட்டிகோட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் கவிழ்ந்தது. இதில், நீலவேணி, பானுமதி, தக்ஷிதா ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.