‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்: கரூா் ஆட்சியா் எச்சரிக்கை

தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:25 pm

DIN

தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்களை உற்பத்தி செய்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் இனங்கள் உற்பத்தி மற்றும் வளா்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை மீன் இனங்களை உற்பத்தி செய்வோா் மற்றும் வளா்ப்பு செய்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மீன்வளா்ப்புக் குளங்கள் மற்றும் மீன்கள் முற்றிலும் அரசால் அழிக்கப்படும்.

மேலும், மீன்பண்ணைகளில் கட்லா, ரோகு, மிா்கால், சாதாகெண்டை, புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை மற்றும் கண்ணாடிக் கெண்டை மீன்கள் போன்ற மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை வளா்க்கலாம்.

இவ்வகையான மீன்களை வளா்ப்பதற்கு மீன்வளத்துறையால் பல்வேறு திட்ட மானியங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநா், எண்.4 காயிதே மில்லத் தெரு, காஜா நகா், மன்னாா்புரம், திருச்சி - 20 என்ற முகவரியிலோ, 0431-2421173 மீன்வள ஆய்வாளா் - 93848 24370 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.