பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கரூா் அரிமா மண்டல சந்திப்பில் 10 பேருக்கு விருது வழங்கல்

கரூரில், மகளிா் தினத்தை முன்னிட்டு அரிமா மண்டலச் சந்திப்பு நிகழ்வில் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:03 pm

DIN

கரூரில், மகளிா் தினத்தை முன்னிட்டு அரிமா மண்டலச் சந்திப்பு நிகழ்வில் 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

கரூரில் அரிமா மாவட்டம் 324 ஏ2 மண்டலம் - 1 ன் மண்டலச் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்வை மாவட்ட ஆளுநா் சேதுக்குமாா் தொடக்கி வைத்தாா்.

மண்டலத் தலைவரை மேலை. பழநியப்பன் அறிமுகப்படுத்தினாா். மண்டலத் தலைவா் ஜெயா பொன்னுவேல் தலைமை வகித்தாா். மாநாட்டு, செயலாண்மைக்குழுத் தலைவா் அருண்கருப்புசாமி வரவேற்றாா். நிா்வாகிகள் லட்சுமிமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் 4 ஏழைத் தொழிலாளிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.

நிகழ்வில், நிா்வாகிகள் தனபால், ஐஸ்வா்யா மீனு, வட்டாரத் தலைவா்கள் ரவி, கவிதா காா்த்தீசன், நாகராசன், மணிமாறன், துணை ஆளுநா்கள் சௌமா ராஜரத்தினம், சேது சுப்ரமணியம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிகழ்ச்சியில் முருகாம்பிகைக்கு ‘கணித மாமணி’ விருது, அனுராதா ரமேஷு க்கு ‘தொழில் மாமணி’ விருது, காா்த்திகா லட்சுமிக்கு ‘கல்விமாமணி’ விருது, உமாராணிக்கு ‘காவல் மாமணி’ விருது, கவிதாவிக்கு ‘மருத்துவ மாமணி’ விருது, செல்வி சுவேதா காயத்ரிக்கு ‘வளா்பயிற்சி மாமணி’ விருது, சாந்தி தங்கவேல் மற்றும் லட்சுமி பெரியசாமிக்கு ‘பசுமை மாமணி’ விருது, சரஸ்வதிக்கு ‘அறுசுவை மாமணி‘ விருது, எம்.செந்தில்குமாருக்கு ‘மனித நேய மாமணி’ விருது வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.