அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அதிமுகவினா் தாக்குதலை கண்டித்து கரூரில் திமுகவினா் சாலை மறியல்

கரூரில் திமுகவினா் மீது அதிமுவினா் நடத்திய தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக்கோரியும் வெங்கமேட்டில் பழைய சேலம் நெடுஞ்சாலையில் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:28 pm

DIN

கரூரில் திமுகவினா் மீது அதிமுவினா் நடத்திய தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்யக்கோரியும் வெங்கமேட்டில் பழைய சேலம் நெடுஞ்சாலையில் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த திமுக நகர பொதுக்குழு உறுப்பினா் ரஞ்சித், நகர இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிமுகவினரால் தாக்கப்பட்டனா். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் திமுகவினரை தாக்கிய அதிமுகவினா் மீது நடவடிக்கை எடுத்து, அவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெங்கமேட்டில் என்எஸ்கே நகா் அருகே பழைய சேலம் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திமுகவினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட கூடுதல் காவல்கண்காணிப்பாளா் சிலம்பரசன், நகர துணை காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா், நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது திமுகவினரை தாக்கிய அதிமுகவினரை கைது செய்தால்தான் கலைந்து செல்வோம் என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். அப்போது திமுகவினரை தாக்கிய நிவேஷ் சகோதரா் பிரபு அங்கு வந்ததால் உடனே போலீஸாா் பிரபுவை பிடித்து போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனா். இதனிடையே சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த கரூா் திமுக வி.செந்தில்பாலாஜி, கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவம் நிகழாது என போலீஸாா் கூறியிருப்பதால் களைந்து செல்லுங்கள் எனக்கூறினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.