புன்னம்சத்திரத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 11th December 2021 12:02 AM | Last Updated : 11th December 2021 12:02 AM | அ+அ அ- |

புன்னம்சத்திரத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், காது, மூக்கு, தொண்டை, கால், மூட்டு, இருதய சிகிச்சை, கண் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம், நரம்பியல் மருத்துவம் மற்றும் முதியோருக்கான மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். தேவைப்படுவோருக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரைத்தனா்.