ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்
By DIN | Published On : 31st December 2021 04:06 AM | Last Updated : 31st December 2021 04:06 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், கல்லூரி முதல்வா் இரா. அன்பரசி தலைமை வகித்துப் பேசினாா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆ.வேலுசாமி இலக்கிய மன்றத்தைத் தொடக்கி வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். முன்னதாக கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில், துணை பேராசிரியா் பாபு நன்றி தெரிவித்தாா். விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...