பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்: கரூர் மாணவி கடிதம்

பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் கரூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி.
பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்: கரூர் மாணவி கடிதம்

பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்க வேண்டும் என கடிதம் எழுதிவிட்டு கரூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

கரூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி. இருவருடங்களுக்கு முன் தந்தை இறந்துவிட்ட'நிலையில், தாயின் அரவணைப்பில் 17 வயது சிறுமி இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி கரூரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் தனது தாயிடம் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிவிடுகிறேன், விரைந்து வீட்டுக்கு வந்துவிடுங்கள் எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்துள்ளது. உள்ளே விளக்கு வெளிச்சமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அப்பகுதியினரை வரவழைத்து வீட்டுக்கதவை உடைத்தபோது, உள்ளே சிறுமி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வெங்கமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீஸார் விசாரித்தபோது, மாணவி அவரது டைரியில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில், ”பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாகத்தான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா. நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை.  ஆனா முடியல.

ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் புடிக்கும். ஆனா, நான் உங்க கிட்டலாம் சொல்லாமப் போறேன். மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி” என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார். இதனால் மாணவியின் சாவுக்கு யார் காரணம் என வெங்கமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்: சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து சிறுமியின் சித்தப்பா மற்றும் உறவினர்கள் வெங்கமேடு காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது, காவல் ஆய்வாளர் கண்ணதாசன் அவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டாராம். இதனால் அவரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாவட்ட'காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com