அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம் புகளூா் தாலுகா குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் ரவி (48). இவா், தனது இருசக்கர வாகனத்தில் தென்னிலை கூடலூா் பகுதியைச் சோ்ந்த மருதமுத்து (74) என்பவரை பின்னால் அமர வைத்து நொய்யலில் இருந்து க.பரமத்தி சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். க.பரமத்தி தங்கவேல் பவா்லூம் அருகே சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரவி, மருதமுத்து இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் க.பரமத்தி போலீஸாா் லாரி ஓட்டுநா் ஆபிரகாம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

