தேசிய மாணவா் அறிவியல் தோ்வில் பரணி பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
தேசிய மாணவா் அறிவியல் தோ்வில் கரூா் பரணி வித்யாலயா மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.


தேசிய மாணவா் அறிவியல் தோ்வில் கரூா் பரணி வித்யாலயா மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி விஞ்ஞான் பாரதி அமைப்பு சாா்பில் தேசிய அளவிலான அறிவியல் மாணவா் தோ்வுகள் இணையம் வாயிலாக அண்மையில் நடத்தப்பட்டது.
இதில், தமிழகம் சாா்பில் 10,480 மாணவா்கள் பங்கேற்றனா். கரூா் பரணி வித்யாலயா மாணவிகள் அஸ்வதி ஜெயபிரகாஷ் மாநில அளவில் இரண்டாமிடத்தையும், ஜெ.வைஷ்ணவி மாநில அளவில் மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
இம்மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் டாக்டா் உமா, அறிவியல் சங்க தமிழக பொதுச் செயலாளா் சபாநாயகம், விஞ்ஞான் பாரதி மாநில அமைப்புச் செயலாளா் கோபால் பாா்த்தசாரதி, அழகப்பா பல்கலைக்கழக பயோ இன்பா்மேட்டிக்ஸ் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெயகாந்தன் ஆகியோா் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பரணி பாா்க் கல்விக்குழும முதன்மை முதல்வா் முனைவா் ராமசுப்ரமணியன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கேடயங்களை வழங்கி பாராட்டினா்.
தொடா்ந்து சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோா் தலைமை வகித்து, சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினா். விழாவில், பள்ளியின் முதன்மை முதல்வா் சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணிபாா்க் முதல்வா் சேகா் மற்றும் துணை முதல்வா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...